பழுப்பு வெள்ளை சிவப்பு பச்சை
பல வர்ணம் தரிக்குது ....!
மறுப்பு சொல்லா மனுஷனோட
சட்டை பையில் சிரிக்குது ...!
கடலோரத்தில் கருவாடாய்....
கோபுரத்தில் உண்டியலாய்....
கயவனின் கயமையாய் ...
கலைஞனின் தூரிகையாய் ...
கவிஞனின் புத்தகங்களாய்...
உழவனின் மண்வாசனையாய் ....
உழைப்பாளியின் வியர்வையாய் ...
வறியவனின் பட்டினியாய் ....
இதற்கு ....
வாசம் ஏராளம் - பலர்
வசமோ தாராளம் ....!!
கோஷம் போட வைக்கும் வகையாய்
வேஷம் போட்டிடுமே.....
கும்பிடும் போட வைக்கும் கைதியாய்
கம்பியும் எண்ண வைக்கும் ...!!
தந்திரமே செஞ்சிடும் இது
மந்திரம் போட்டே மயக்கிடும்
எந்திரமாய் ஆக்கிடும் மனிதனை
கயவனாய் மாற்றிடும் !!!!
தொட்டிலுக்கும் காட்டுக்கும் நடுவிலே
கோட்டை கட்டி வாழ்ந்தாலும்
குடிசையிலே வளர்ந்தாலும்
மண்ணுக்கு போகும் பிறப்பிது
மக்கியபின் அதுக்கு மதிப்பேது ???
வெறும் காகிதம் தான் ஆனாலும்
வாழ்க்கை அது பின்னே ஓடுது
தேடும் வரை தூரம் இல்லை
கிடைத்த பின்போ பாரம் உண்மை !!
சேர்த்து வெச்ச சொத்தெல்லாம்
செத்த பின்னும் வந்திடுமா ???
பகிர்ந்து வாழ்ந்தால் பலரோடுவாழ்க்கை அது பின்னே ஓடுது
தேடும் வரை தூரம் இல்லை
கிடைத்த பின்போ பாரம் உண்மை !!
சேர்த்து வெச்ச சொத்தெல்லாம்
செத்த பின்னும் வந்திடுமா ???
நாடும் நம் வீடாய் ஆகிடுமே !!!!