தவித்தது என் இதழ்கள் !!
தாகம் உண்டாக்கினாய் ...
வேட்கை தணியேன்
முழுதும் பருகாமல் ....
அலைந்தது என் விழிகள் !!
நிலையாய் நிற்க செய்தாய் ...
திக்கை அறிகிலேன்
உன்னை விலகாமல் ...
மறந்து போனது உறக்கமும்
இரந்து கேட்டன கண்களும்
இரக்கம் காட்டிட இமைகள் மூடிட !!
எழுதிட துடித்திடும் பேனா முனை
தழுவிட மறுத்திடும் வண்ண தூரிகை
நீ கொள்ளை அடித்ததினால்
வெள்ளை காகிதமாய் மனது!!!
வியந்தது மதி ...பயந்தது தேதி ....
கசந்தது கனியும் ... அசந்தது அணியும் ...
படிப்பது உனையென்றால் வியந்ததில்
வியப்பேது ??
முடிக்காது வினையில்லையெனில் பயந்ததில் பிழையேது ??
இனிப்பது நீயென்றால் கசந்திடாதோ
கனியும் !!!
வனப்பு உனதெனில் அசந்திடாதோ அணியும் !!!
அமுதினும் இனிமை நீ என்றான்
அளவுக்கு மீறினால் அமுதும் நஞ்சாம் அதிகம் உனை நான் கொண்டேன்
அஞ்சேன் நீ நஞ்சாகினும் !!!
அழைப்பது நீ என்றால்
சிலையாக நான் இருப்பேனோ ??
வளைத்தது நீ என்றால்
மலையாக நான் கிடப்பேனோ ??