அண்ணலும் நோக்கிட அவளும் நோக்கிட
அஞ்சுகத்தின் விழி எய்திய அன்பில்
அண்ணலவன் விரல் எய்திய அம்பில்
மலர்ந்தது காவியக் காதல் !!
பூத்த பருவம் முதலாய்
மாயும் காலம் வரையில்
சேர்த்த அவன் ஞாபங்களை
கோர்த்து மாலையாக்கி
சூடிடும் கன்னி காதல் ...!!
ஈர்த்திடும் அவள் அழகில்
கோர்த்திட ஏங்கும் கைகள்
உதிர்த்திடும் அவள் மொழியில்
அடங்கி போகும் காளையர் காதல் ...!!
காற்று வீசிட கண்கள் உறங்கிட
தென்றலாய் மனந்தன்னை தீண்டிடும்
விழித்து எழுந்ததும் தானாய்
கலைந்திடும் கனவு காதல் ....!!
சிறு சிரிப்பில் சிறகடிக்கும் இதயம்
குறுஞ்செய்தியில் மறுபிறப்பெடுக்கும்
மெலிதாய் துளிர் விடும் ; சிலது
முழுதாய் மரமாகும் கல்லூரி காதல் ...!!
முதல் பாதியில் மையல் கொள்ளும்
கானம் பாடியே மனம் வெல்லும்
முற்றும் என்றதும் ஓசை இல்லாமல்
மடிந்து போகும் சினிமா காதல் ....!!
பருவம் எதுவாயினும்
உருவம் மாறிடினும்
உறவுகள் தோன்றினும்
உயிர்ப்போடு என்றும்
மறந்து போகா நினைவுகளாய்
இறந்து போகாத முதல் காதல் ....!!
அருமை....
ReplyDelete