என் அன்புத் தோழியே ....!!!
பூமியென்னும் மேடையிலே வாழப் பிறந்தவளே...
புன்னகை கொண்டு என் நெஞ்சில் ஸ்நேகம் வளர்த்தவளே...!!
தித்திக்கும் தமிழாய் என் நெஞ்சில் திளைத்தவளே
எத்திக்குச் சென்றாலும் உன்னை நினைக்கச் செய்தாயே....!!
சுவாசிக்கும் காற்றாய் மூச்சில் கலந்தவளே...
வாசிக்கும் கவிதையாய் வார்த்தையில் வந்தவளே....!!
மழை மேகமாய் மனதில் சேர்ந்தவளே...
சிலை வடிவாய் சிந்தையில் நின்றவளே...!!
சத்தமின்றி என் இதயத்தை துடிப்பாய் ஆக்கியவளே...
சங்கீதமாய் என்றும் என் வாழ்வில் ஒலிப்பவளே...!!
தித்திக்கும் நினைவுகள் நெஞ்சில் தோன்றினும்....
திகட்டாத இன்பமாய் இனிப்பது உன் நட்பு தானடி...!!
நிலவெனும் உறவு விடியலில் முடியும் - நம்
நட்பெனும் உறவு என்றும் வளர்பிறையே .....!!!!