Thursday, 3 November 2016

பெயரிட்டான் பெண்ணென !!!!!



Image result for a girl sitting alone in the sunrise


அன்பின் பெருங்கடலும் இவளே !!
      ஆணின்  தேடலும் இவளே !!!
களங்கமில்லா அன்பிலே அவளைத்
        தாய் என்றான் !!!
கைப்பிடித்தபோதோ  அவளைத்
        தாரம் என்றான் !!!
தோள் தந்து தேற்றுமவளைத்
         தோழி என்றான் !!!
தலைக்கோதி விளையாடிட
         தமக்கை என்றான் !!!
தாலாட்டி சோறூட்டிட
         தங்கமகள் என்றான் !!!
மொத்தத்தில் தோற்றத்தில்
         தேவதை என்றான் !!!!!
விளங்கமுடியா புதிரென
     விதியின் விளைவால்
விதைத்திட்டான் இறைவன் ....
            விளக்கிட விழைந்து
 பெயரிட்டான் பெண்ணென  !!!!







Friday, 2 September 2016

நானும் வாழ்கிறேன் !!!

நானும் வாழ்கிறேன் !!!
அதிகாலை  உதயலில் தொடங்கி
அந்தி மாலை சாய்தலில்
முடிவது வாழ்க்கை என்றால்
நானும் வாழ்ந்து கொண்டு
தான் இருக்கிறேன் .....

பூக்களைப் போல்....
காலையில் மலர்ந்து
வெயிலில் உலர்ந்து
மாலையில் தளர்ந்து
இறுதியில் மடிந்தே போகிறேன் ....

வாழ்விற்கு அர்த்தம் இதுவென்றால்
என்னைப்  போல் பலரும்
வாழ்வதைப் பார்க்கிறேன் ....

கனாக்களில் தொடங்கி
வினாக்களில்  முடிகிறது
சில சமயம் ...
இருப்பினும் நானும் வாழ்கிறேன் !!!

என்னைப் போல்....!!!
கேள்விக்கணைகளைத்  தொடுத்து 
மாலையாக்கி வாழ்பவர் ஏராளம் ....
எப்போதும் புரிந்ததில்லை...!!!
விடை  கண்டவர் சிலர் மட்டுமே ...







விவசாயி எனும் கனவு

Image result for sad indian farmer waiting for rain


நீரின்றி அமையாது உலகு
உழவின்றி வாராது உணவு
நெல்லவிக்க அரிசி ஆனது
வானம் பொய்த்து தரிசு ஆனது
கனவாகி போனது...
கலப்படம் இல்லா  உணவு
விதி இங்கே யாரை நோவது ??
மதி கெட்ட மக்கள் செயலிது !!!
அழிந்து வரும் விவசாயம்
நலிந்து வரும் விவசாயி
பொய்யும் என நாளும் வானம் பார்த்து
பொழுது விடியும் என தினம் எதிர்பார்த்து !!!
         களவு போனது ... என்
------விவசாயி எனும் கனவு---------

Thursday, 25 August 2016

மனதின் தூது





எழுத விழைகிறேன் !!!
மனதில் எண்ணங்கள் ஏதுமில்லை
எனினும் எழுத விழைகிறேன் ...
தினம் காணும் காட்சிகள் விழித்திரையில்
மௌனமாய் கதைப்  பேச ...
விரல்களின் பிடியில் பேனாமுனையின் மைப் பேச ...
நானும் எழுதுகிறேன் எண்ணம் ஏதுமின்றி ...
மகத்துவம் ஏதுமில்லை இதில் ....
மனதின் தவம் தானோ ????
மையல் கொண்டேன் எழுத்தின் மீது
கையில் வரைந்தேன் மனதின் தூது ...!!!

கனவென்னும் பாதையில் நடைபயில !!!

Image result for nature pictures




விசைக்கு இயங்கும் இயக்கமாய் 
வாழ்க்கை மாறிட ..
வசைக்கு பயந்தே தானியங்கியாய் 
தன்னை தேற்றிட ...
ஆசை மறந்து அன்பை விடுத்து 
ஓசைக்கு நகரும் இயந்திரமாய் செவிமடுத்து !!
நரகமாகி போனது நகரம் ....!!!

ஏன் செய்கிறோம் ...??
எதற்காக செய்கிறோம் ...??
என்ன செய்கிறோம் ..??
எவ்வாறு செய்கிறோம் ...??
கேள்விகளுக்கு விடையேயின்றி 
பல நாட்கள் செய்கிறோம் ...
ஆனாலும் செய்கிறோம் !!!

கனவுகள் சிறகு விரித்து பறக்க 
கூண்டுக்குள் அடைப்பட்ட பறவையாய் ...
எத்தனிக்கும் போதெல்லாம் 
இறக்கைகள் வெட்டப்பட்டு ...
ஆனால் பறக்கவும் செய்கிறோம் ....
கனவில் மட்டும் வெகுதூரம் !!!

உதிக்கும் சூரியனின் எழில் காணாது 
மயங்கும் மாலையின் வனப்பை ரசிக்காது 
மதிக்கும் உயிரின் அன்பை அணைக்காது 
உறங்கும் இதயம் கொண்டு 
எதற்கிந்த மனித வாழ்வு ...???
மன்னிக்கவும் இயந்திர வாழ்வு !!!

தகர்த்தெறி நண்பா...தடைகளை இனி ....
கேள்விக் கணைகளுக்கு ....விடையாய் நீ !!!
வாழ்ந்திடு புதியதொரு வாழ்வை 
மனிதனாய் .....!!!!

சாளரம் திறந்திடு 
சங்கீதம் தவழ்ந்து வர ...
ரீங்காரமிடும் வண்டுகளின் 
கீச்சிடும் குருவிகளின் ஒலியில் ....

காலநேரம் கண்டிட கடிகாரம் எதற்கு ???
மாலையில் சூரியன் மறைந்திடும் மேற்கு ..
காரிருள் போக்க வந்திடுமே நட்சத்திரம்...
வான்கூரையின் கீழ் அமைத்திடுவோம் சத்திரம் !!!
வா நண்பா!!!
வாழ்வோம் நாமும் வாழ்வை 
இயற்கையின் துணையில் 
காலம் தாண்டி  வாழும்
காலடிச்சுவடுகளை  பதித்து 
கனவென்னும் பாதையில் நடைபயின்று ...!!!!




ஞாபகத்துளிகள்

நானும் பக்கங்களை புரட்டிப்  பார்க்கிறேன்
உன் ஞாபகத்துளிகள் எங்கேனும்
என் வாழ்க்கைப் புத்தகத்தில்
சிதறி இருக்கிறதா என ....!!!
ஏமாற்றம் தான் எனக்கு மட்டுமல்ல
என் பேனாமுனைக்கும் தான் !!!
எழுத மறந்தவை வார்த்தைகள் மட்டுமல்ல
என் வாழ்வின் வர்ணஜாலங்கள் !!!
இனியேனும் சேமிக்கிறேன் உன் நினைவுகளை
இமைகளில் புகைப்படம் காத்து
இதயத்தில் இரத்தத்துளிகள் கொண்டெழுதி...
பேனாமுனைக்கு தத்து கொடுத்து விடாமல் !!!

எழுத்தும் நானும் ....!!!!!






எழுதுவதில் ஏனோ அலாதி பிரியம் எனக்கு ...
எழுதும்போது  என் பிம்பம் காண்கிறேன்
சிரிக்கும் வார்த்தைகள் சந்தோசமாய்
அழும் வார்த்தைகள் சோகமாய்
ஆறுதல் வார்த்தைகள் தேறுதலாய்
வார்த்தைகள் தேடித்தேடி சேர்க்கிறேன்
என் வாழ்க்கையை வடிவமைக்க
எனக்குள் இருக்கும் நான் என்னையே
 எழுதும்போது  உணர்கிறேன் ....!!!

என் தனிமைக்காலங்களின் துணையாய்
என் இனிமைக்காலங்களில் சுகமாய்
என் சோகங்களில் நிழலாய்
இப்படி என்னுள்ளும் என் ஞாபகங்களிலும்
வந்து வந்து போகும் மாற்றங்களை
சிறை பிடித்து வைக்கும் என் வார்த்தைகளை
எழுதுவது பிடிக்கும் ...!!!!

வார்த்தைக்கடல் வற்றும் வரை
வாழ்க்கையின் அத்தியாயம் முடியும் வரை
எழுதுகிறேன் நான் என்னையும்
என் நினைவுகளையும் !!!!




Wednesday, 24 August 2016

உயிர் பெற காத்திருக்கிறேன்....!!!


Image result for dreams


பிறந்தேன் ....
பிறப்பினால் மட்டுமே நான் உயிர் பெற்று விடுவதில்லை ...
வினாடிகள் நிமிடங்களாய்
நிமிடங்கள்  நாழிகையாய்
வேகமாய் நகர்ந்தன ....
நாட்கள் மாதங்களாய்
மாதங்கள் வருடமாய்
இப்படியே .....
வாழ்க்கை சக்கரமும் சுழன்று கொண்டே
ஆனால் ...
நான் இன்னமும் உயிர் பெறவில்லை ...
ஐந்து வயதில் மழலையாய்
பத்து வயதில் சிறுமியாய்
பதினைந்தில் பருவமெய்தி
மூவெட்டில் மனைவியாய்
உயிர் கொடுத்தேன் நானும்
மன்னிக்கவும் !!!
பிறப்பித்தேன் ஓர் உயிரை....!!
ஆனால் ....
நான் இன்னமும் உயிர் பெறவில்லை ....
எனக்குள்ளே உறங்கும் என் கனவுகளும்
என்னை உறங்க விடாத என் லட்சியங்களும்
என்று நினைவாகுமோ அன்று  உயிர்பெறும்
என்ற நம்பிக்கையில்இன்னமும் நான்...
உயிர் பெற காத்திருக்கிறேன் !!!!





நிலவோடு ஓர் உலா

Image result for moon at night lonely girl



இனிதாய்   ஒரு  பயணம்
இரவோடு நானும்
என்னோடு நிலவும்
சென்றோம் வெகுதூரம் .....
இருளில் ....நிலவின் ஒளியில்
கைகோர்த்து காற்றோடு கலந்து....

காற்றிலே ஆடும் தென்னங்கீற்று
கவிதை பாடும் புதுமொட்டு
ரசித்தேன் இருவிழி விரித்து
நகர்ந்தே போனது
இரவுப்பொழுது ....

கடலின் ஒலியில் நிலவின் துணையில்
இனிமையாய் ஒரு இசைக்கச்சேரி !!!
நிலவை கண்டு அலை பொங்கியதோ ???
அலை பொங்கியதால் நிலவு வந்ததோ ??
நாணம்  வந்ததால் நிலவும் மறைந்ததோ .....
நிலவு மறைந்ததால் அலையும் கலைந்ததோ ...

வாழ்வும் இது போலதானோ !!!
தேடி கிடைத்த பின் தொலைந்து போவோம்
மீண்டும் ஒரு  தேடலில் ....
நானும் தொலைந்தே போனேன்
இரவின் மயக்கத்தில்
விடியும் விடியலைத் தேடி ....!!!!!



 

Wednesday, 30 March 2016

வானும் ......நானும் ...

Image result for sky and a girl


காலை ஆறு மணி ....!!!
நிலவு எங்கோ களவு போயிருக்க
உளவு  பார்க்க வந்ததோ....செங்கதிரை
வானெங்கும் பரப்பி சூரியன் ...!!

கரைந்து போகும் காகமும்
களைத்து போனது தன்பணி செய்து
கீச்சிடும் குருவிகளின் சத்தத்தில்
கலைந்து போனது என் உறக்கமும் ...!!

மெலிதாய் ஒரு வெளிச்சக் கோடு
முன் சாளரம் வழியே பளிச்சிட ...
கடிகாரம் ஒலியெழுப்பி விடியலை சொல்ல
என் கனவும் தொலைந்து போனது
இதோ நிகழ்காலத்தில் நான் ....!!

காலை நேரப்  பனித்துளி ரசித்தபடி
கோப்பைத்  தேநீரை ருசித்தபடி
அலசினேன்.... அன்றைய
விடியலை செய்தித்தாளில்
அலைப்பேசியின் குறுஞ்செய்திகளுக்கு
விடை அளித்தபடி....

இட்லியுடன் புதினா சட்னியும் இதமாய்
பிட்டு உண்ட நிறைவோடு இனிதாய்
சிற்றுண்டி முடிந்தது காலை வேளையில் ....!!!
புதிதாய் மலர்ந்த பூக்களின் மணமாய்
புன்னகையோடு என் மனமும் துளிராக
புது மலர்ச்சியோடு நடந்தேன் சாலையில் ....!!!

புங்கைமரம் என்னை வரவேற்க
சொறிந்ததோ பூ மழை
மஞ்சளாடையில் தார் சாலை....

இன்னமும் தேடிக்கொண்டுதான்
இருக்கிறான்  போல பகலவன்
ஏனோ ?? நிலவு கிடைக்காததாலோ...!!
உஷ்ணமாய் தகிக்கிறான் ...!!

பசியால் உடலும் சோர்வுற
புசிக்க அமர்ந்தேன் உணவை
ருசிக்க ஏனோ நா மறக்கவில்லை
அமிழ்தாய் இனித்தது  சமையல்
அம்மாவின் கைப் பக்குவத்தில் ...!!

மெல்ல விலகும் கதிரவன்
மறைந்து  கொண்டான் மலைமுகட்டில்
மறைத்து கொண்டானோ .. ??? தன் மனதையும் ...!!

மீண்டும் அதே தார்சாலை ....!!!
தென்றல் காற்றில் மெய்சிலிர்க்க
உணர்ந்தேன்.... பூக்களின் வாசம் !!
இதயம் சென்று திருடும்
இயற்கையின் வனப்பு ...!!

வீதியில் நான் சேரும் முன்னே
உணர்ந்தாள் வருகையை என் அன்னை
வாயிலில் நீர் தெளித்து
வரவேற்றாள் செவ்வானத்தை...!!

வெட்கம் கொண்டதோ வானம் !!
செஞ்சிவப்பு  நிறம் மட்டும் ஏனோ ??
ஆகாயத்தில் தினமும் நிகழ்வது தானோ ??
வானில் ஓர் ஊடல்; இது நிலவுக்காய் தேடல் ...

வெள்ளைப்  பூவாய் நிலவே  !!!
வானில் நீயும் பூத்திருக்க ...
கொள்ளை கொள்ளும் அழகிலே!!
 மறைந்து போயிருக்க....
தன்னை தொலைத்து பகலவனும்
இரவு உணவை முடித்திருக்க....
நிலாச்சோறு  உண்ட திருப்தியில்...நானும் ..

மீண்டும் வந்தது குளிர் தென்றல்
கண்கள் சொருக ....வானிருளில்
உலா போக வந்தது வளர்பிறை
நிலவு.... களவு போனேன்
நானும் அதன் ஒளியிலே
உறக்கம் கொண்டன  இமைகளும்
விடியலுக்கான கனவுகளோடு ....
























Friday, 18 March 2016

நட்புக்கு தெரிவதில்லை ....!!!


Image result for different roses images


சொந்தங்கள் அனைத்தும் போகும் தொலைவிலே
       தோள்சாயும்  நட்பின் அன்பிலே...
சாதிக்கும் போதெல்லாம் தட்டிக்கொடுக்கையிலே
       வாதிடும்  போதோ வார்த்தையிலே...
தடுமாறும் நேரம் வாழ்க்கைத்  தடமாறமாலே
         வழிமாற்றும்  மனம் தேற்றும் ....
                              நட்புக்கு....
தெரிவதில்லை ஏனோ  என்று  பூப்பதென்று ....

கால்சட்டை அணியத்  துவங்கிய பருவத்திலே
      மழைக்கு முளைக்கும் காளானாய்...
 கண்கள் கலங்கும் துளி ஈரத்திலே
       விரல்கள் மாறும் கைக்குட்டையாய் ...
சரித்திரம் அதிலே புதியதொரு அத்தியாயமாய்
     வரைந்திட்டால்  என்றும் புன்னகைக்கும்  ஓவியமாய்
                           மாறும்  நட்புக்கு....
தெரிவதில்லை ஏனோ எப்படி பூப்பதென்று ....

வாழ்க்கையில்அவ்வப்போது மலர்ந்திடும்
         சின்ன சண்டைகள் சித்திரப் புன்னகைகள்
வண்ண கனவுகள்  வட்டமிடும் நினைவுகள்
         செல்ல கோபங்கள் நல விசாரிப்புகள் என
                      வாழும் நட்புக்கு...
தெரிவதில்லை ஏனோ எவ்வாறு  பூப்பதென்று  ....

நில்லாமல் ஓடும் நாட்களாய்
        தினமும் நீளும் தொடர்கதை இதுவோ ....??


   





விடை சொல் நட்பே ....!!





நட்பே ....!!!

காற்றாய்  நீ ....!!என் வாழ்வில்  வீசிப் போனாய்
உன்னைப் பிரிந்தால் சுவாசம் வாசமின்றிப் போகும் ...

பூக்களாய்  நீ ....!!என் வாழ்வில் பூத்து விட்டாய்
நீ வாடினால் என் மனமும் உதிர்ந்துவிடும்....

நிலவாய் நீ....!! வந்து போனதால் என் வாழ்வில்
சிலநேரம் என் வானம் இருட்டி விடுகிறது.....

மழையாய் நீ...!! என்னை பிரிந்து பூமிக்கு வந்ததால்
மேகமாய் இருந்த நான் மறைந்து போனேன் ...

வெயிலாய் நீ...!!என்னை சுட்டெரித்தாலும்
வேதனையை குறைத்து சென்றாய்....

பகலாய் நீ....! ஒளிர்ந்து நின்றாய்
இரவாய் நீ....! நின்று ஒளிர்ந்தாய்
வானவில்லாய்  நீ ....!! வளைந்து வந்தாய்

மாறாத வானிலையாய் என்று என்
வாழ்வில் நீ வாழ்ந்து போவாய் .....????

விடை சொல் நட்பே ....
விடைப் பெறுகிறேன் என்று மட்டும் சொல்லாதே ....!!!!
                             

உறவுக்கு உயிர் கொடுத்திடு ....!!





காலை நேரம்  தோன்றும் வானம் நீ !!!
புது விடியல் தேடும் பூமி நான் !!!

இருவிழி நோக்கையிலே புதிதாய் ஒரு ஒளி ...
இமைகள் மூடிடவே  மெலிதாய் சிறு வலி....

கண்டேன் பெண்ணே ......உன்னை
சேர்த்தேன் எந்தன் இதயத்திலே
காற்றாய் நீயும் ...
கலந்தாய் என் மூச்சினிலே !!

ஆசையில்  ஓர் அஞ்சல் வரைந்தேன்
மேசையில்.... அது உன் பார்வையில்
சேர்த்திட வைத்தேன்
கண்டாய் நீயும் !!!
கொண்டேன் நானும் உனை நெஞ்சிலே..

தேய்ந்து வளரும் நிலவாய் நாளும்
உனை பார்த்து வாழ்ந்தேன் நானும்
நீ ஏங்கிட ....
நான் தூங்கிட....
ஒரு வழி சொல் கண்ணே ...

விட்டுச் செல்லும் எண்ணமில்லை
நீயின்றி வண்ணமில்லை
வாழ்விலே......என் வாழ்விலே
வானவில்லும் நீயே...
எனை வெல்லும் விழியும் உனதே ...

சேர்ந்திடு....
எனை உன்னில் சேர்த்திடு
உயிர் கொடுத்திடு ....
நம் உறவுக்கு ....






Tuesday, 8 March 2016

பெண்மை




சித்திரமும் பேசும் அவள் அழகிலே 
      சத்திரியனும் வீழ்வான் விழி நோக்கையிலே 
காரிருள் கருமை நீக்க கண்ணுக்கு மை இட்டவள் 
      சூரியக் கதிர் எடுத்து சுடர் ஏற்றியவள்
வாரியே அன்பை வழங்கும் வள்ளலவள் 
      வானவில்லை வளைத்து கைவளையல் செய்தவள்
பொங்கிவரும் அலையினை கண்ணுக்குள் அடைத்தவள் 
      தங்கிவிடும் சோகம் போக்க தனியே அழுதவள்  
பௌர்ணமியாய் ஒளி வீசும் பூவவள்
      புன்னகையில் புது வாசம் பேசியவள்
ஆதரிப்பாய் என உன்வழி நடந்தவள் 
       சேதாரமென நீ தூக்கி எறிந்தவள் 
தங்கம் வேண்டுமென தாக்கி வதைத்தாய் 
       அங்கம் சிதைத்தாலும் மரித்து போகவில்லை 
வானம் சேரவோ மனது கொள்ளவில்லை 
      மானம் பெரிதென தனதாய் நின்றாள் 
மாறும் உலகிற்கு துணையாய் வந்தாள் 
     பாரும் ஒருநாள் தனதாக்கி வெல்வாள் .....


தொடரும் என் பயணம் ....




காத்திருந்த விழிகளில் கண்ணீர் வழிந்தோட
காயம்பட்ட மனதிற்கு மருந்தாய் உன் நினைவுகள் ...
காற்றிலசையும் பூங்கொடியோ உன் வரவை சொல்ல
கானகத்து தென்றலாய் என் மனதும் லேசாக ....

மாயமாய் வந்து போனாய் மேகத்திரையில்
மாற்றம் கண்டேன் என் விழித்திரையில்
மயக்கும் உந்தன் பேச்சில் மறைந்திட்டேன் நானும்...
மாயவனே ...!! வந்தென்னை கொண்டு செல்வாயோ ??
வாராது என்னை வீழச் செய்வாயோ ???

செதுக்கினேன் உன்னை சிற்பமாய்
        என் உயிரெனும் உளி கொண்டு
        என் உணர்வெனும் ஒளி  தந்து....
வெதும்பினேன் என் சிற்பம் உயிர் பெற
வலி கொண்டு....நாளும் வலி கொண்டு ....
வலி போக்கிச் சென்றாய் ... நீயும்  வளி தந்து ....

பூவை தேடும் வண்டாய் .... நானேனோ
காகிதம் போல் வானில் பறந்தேனோ ??
அதில் கவிதையாய் என் இதயம் மடித்து
தூது ஒன்றை செய்து வைத்தேனோ ....

உனை சேரும் நாள் பார்த்து
விழி நீர் கோர்த்து ,,,,
தொடருது என் பயணம் ...
தேடியே விடியல் தோறும் ....!!





Wednesday, 24 February 2016

நட்பெனும் உறவு..... என்றும் வளர்பிறையே....





என் அன்புத் தோழியே ....!!!
பூமியென்னும் மேடையிலே வாழப் பிறந்தவளே...
புன்னகை கொண்டு என் நெஞ்சில் ஸ்நேகம்  வளர்த்தவளே...!!

தித்திக்கும் தமிழாய் என் நெஞ்சில் திளைத்தவளே
எத்திக்குச்  சென்றாலும் உன்னை நினைக்கச்  செய்தாயே....!!

சுவாசிக்கும் காற்றாய் மூச்சில் கலந்தவளே...
வாசிக்கும் கவிதையாய் வார்த்தையில் வந்தவளே....!!

மழை மேகமாய் மனதில் சேர்ந்தவளே...
சிலை வடிவாய் சிந்தையில் நின்றவளே...!!

சத்தமின்றி என் இதயத்தை துடிப்பாய் ஆக்கியவளே...
சங்கீதமாய் என்றும் என் வாழ்வில் ஒலிப்பவளே...!!

தித்திக்கும் நினைவுகள் நெஞ்சில் தோன்றினும்....
திகட்டாத இன்பமாய் இனிப்பது உன் நட்பு  தானடி...!!

நிலவெனும் உறவு விடியலில் முடியும் - நம்
நட்பெனும் உறவு என்றும் வளர்பிறையே .....!!!!

Sunday, 21 February 2016

நிஜமாய் நீ ஆனால் .....!!!






துன்பம் வரும் வேளையிலே 
தூயவளே ! உன்னை நினைத்தால்
தூரப் போகுதடி ....

இன்பமான தருணங்களில் 
இனியவளே ! நீ வந்தால் 
இருமடங்குப் பெருகுதடி ...

தோல்வி அடையும்போது 
தோழியே ! நீ வந்தால் 
தூசு போல ஆனதடி.... 

வெற்றி பெறும் போது 
வெண்பூவே ! நீ இருந்தால் 
வானம் சிறியதானதடி....

கனவில் தோன்றிய என் 
   கற்பனையே !! நிஜமாய் நீ ஆனால் 
             நிழலாய் உன்னை தொடர்வேன் .......

Saturday, 20 February 2016

வானம் தொட்டுவிடும் தூரம்தான்






வானம் தொட்டுவிடும் தூரம்தான்.
ஆம் ....
வானம் தொட்டுவிடும் தூரம்தான் ....

ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் அந்நியரின் 
       அடிமைப்பிடியில்  வாழ்ந்த நாம் மீளவில்லையா ???
வறண்ட பூமியாய் இருந்ததை 
       வாழும் பூமியாய் மாற்றவில்லையா ??

கடுகைத் துளைத்துத்தான் வள்ளுவன் 
       இருவரியில் குறள் செய்யவில்லையா ??
அணுவைத் துளைத்துத்தான்  அப்துல்கலாம் 
      ஆழ்கடலை அளக்க வில்லையா ???

இருளில் வாழ்ந்த மனிதன் வெளிச்சத்தைத் 
     தேடி ஒளி ஏற்றவில்லையா   ????

போராட்டம் நிறைந்த இந்த பூமியில் 
       புகழ்உச்சியை  எட்டியவரை  காணும்போது 
           புரிகிறது தொட்டுவிடும் தூரம் தான் வானம் .......!!! 

தேரோட்டமாய் நம் வாழ்வும் சிறந்திட 
      கனவு காண்போம் .... காணும் 
          கனவை நிஜமாக்கிட  முயற்சிப்போம்.....!!!

முயற்சி என்பது மூலதனமானால் 
    முன்னேற்றம் பின்னே வந்து சேரும் ...
       கஷ்டங்கள் என்பது காகிதமானால்  
            வெற்றிகள் அனைத்தும் காவியமாய் மாறும் ....



      

பூக்களாய் புன்னகை செய் ....!!!








பூக்கள் எப்போதும் அழுததில்லை தான்
             உதிரப்போவதை நினைத்து ....
பூச்செடிகள் என்றும் கலங்கியதில்லை பூக்கள்
           மடிந்துப் போவதைக் குறித்து ....
 மீண்டும் பூக்கும் மலர்களை வரவேற்க புன்னகைக்கிறது .

மனித மனமே ...!!! நீ மட்டும் ஏன் அழுகிறாய் ???
தொலைந்து போன இன்பங்களை தேடுவதை விட்டு
வளைந்து கொடுத்து வாழ்வினை வாழப்  பழகிக்கொள் ....

துன்பங்களை தூரப்போடு....
புதியதொரு வாழ்வை வரவேற்க ...
வசந்தகாலம் பூக்களுக்கு மட்டுமல்ல ......
                                                          உனக்கும்தான்.....

வல்லரசு கனவை எதிர்நோக்கி .....






அணுவைக் கொண்டு ஆழ்கடலையும் வானுலகையும் அளந்தாய்!!!
அன்பையும் அறிவையும் கொண்டு மாமனிதனாய் உயர்ந்தாய் !!
இந்தியாவிற்கு வல்லரசு கனவு தந்தாய் !!
விஞ்ஞானத்திற்கு புதியதோர் இலக்கணம் செய்தாய் !!!
தலைக்கணம் இல்லாத் தலைவனே....... !!!
சாய்ந்தாடும் தென்றலும் ஓய்ந்து போனது  
உந்தன் மூச்சு நின்றதாலோ ???
மாய்ந்து போனதாய் எண்ணமில்லை.... மீட்டெடுப்போம்  
உன்னை .....!!!
நீ கண்ட கனவுகளை மெய்யாக்கி ...!!!
உந்தன் பாதச்சுவடுகளை எந்தம் பாதையாக்கி ...!!!.
விடியும் விடியல் உந்தன் வல்லரசு கனவை எதிர்நோக்கி.....!!!! 






Wednesday, 17 February 2016

மௌனம்






வாசிக்க முடியா
வார்த்தைகளால்
வடிவமைக்கபட்ட
மொழி.
மௌனம் 


நிறைவேற்ற
நினைக்கும்
நிஜங்களின்
நிழற்படங்கள்.
- கனவு 

Friday, 12 February 2016

என் சுவாசக் காற்றே ....




உருவமே இல்லாமல் உயிர் கொடுக்கும் தெய்வம் நீ !
உணர்வுகளால் உன்னை உணர்த்தினாய் ....
தென்றலாய் வந்து தீண்டும் போது தோழியே !
தெவிட்டாத இன்பம் தந்தாய் ...
மணத்தை இப்பூவுலகெங்கும் பரப்பி என் 
மனதை கவர்ந்து சென்றாய் ...
நீர்த்துளியை சுமந்து மழையாய் பொழிந்து 
நிம்மதியாய் வாழவழி செய்தாய் ...
இனிமையான இசைதன்னை ஏந்தி வந்தென் 
இதயம் எங்கும் இதமாக்கினாய்...
சுகந்தமாய் வீச வேண்டிய நீ ஏனோ ?
சூறாவளியாய் சுழன்று வந்தெங்கள் 
சுகங்களை எல்லாம் திருடிச் சென்றாய் - அதனால் 
சிறகே இல்லாமல் பறக்கின்ற உன்னை 
சிறை வைக்க முயன்றேன் என் சுவாசத்தில் .....

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...