காத்திருந்த விழிகளில் கண்ணீர் வழிந்தோட
காயம்பட்ட மனதிற்கு மருந்தாய் உன் நினைவுகள் ...
காற்றிலசையும் பூங்கொடியோ உன் வரவை சொல்ல
கானகத்து தென்றலாய் என் மனதும் லேசாக ....
மாயமாய் வந்து போனாய் மேகத்திரையில்
மாற்றம் கண்டேன் என் விழித்திரையில்
மயக்கும் உந்தன் பேச்சில் மறைந்திட்டேன் நானும்...
மாயவனே ...!! வந்தென்னை கொண்டு செல்வாயோ ??
வாராது என்னை வீழச் செய்வாயோ ???
செதுக்கினேன் உன்னை சிற்பமாய்
என் உயிரெனும் உளி கொண்டு
என் உணர்வெனும் ஒளி தந்து....
வெதும்பினேன் என் சிற்பம் உயிர் பெற
வலி கொண்டு....நாளும் வலி கொண்டு ....
வலி போக்கிச் சென்றாய் ... நீயும் வளி தந்து ....
பூவை தேடும் வண்டாய் .... நானேனோ
காகிதம் போல் வானில் பறந்தேனோ ??
அதில் கவிதையாய் என் இதயம் மடித்து
தூது ஒன்றை செய்து வைத்தேனோ ....
உனை சேரும் நாள் பார்த்து
விழி நீர் கோர்த்து ,,,,
தொடருது என் பயணம் ...
தேடியே விடியல் தோறும் ....!!
No comments:
Post a Comment