Friday, 12 February 2016

என் சுவாசக் காற்றே ....




உருவமே இல்லாமல் உயிர் கொடுக்கும் தெய்வம் நீ !
உணர்வுகளால் உன்னை உணர்த்தினாய் ....
தென்றலாய் வந்து தீண்டும் போது தோழியே !
தெவிட்டாத இன்பம் தந்தாய் ...
மணத்தை இப்பூவுலகெங்கும் பரப்பி என் 
மனதை கவர்ந்து சென்றாய் ...
நீர்த்துளியை சுமந்து மழையாய் பொழிந்து 
நிம்மதியாய் வாழவழி செய்தாய் ...
இனிமையான இசைதன்னை ஏந்தி வந்தென் 
இதயம் எங்கும் இதமாக்கினாய்...
சுகந்தமாய் வீச வேண்டிய நீ ஏனோ ?
சூறாவளியாய் சுழன்று வந்தெங்கள் 
சுகங்களை எல்லாம் திருடிச் சென்றாய் - அதனால் 
சிறகே இல்லாமல் பறக்கின்ற உன்னை 
சிறை வைக்க முயன்றேன் என் சுவாசத்தில் .....

என்றும் என் நினைவுகளில் நீயே !!!!





 உன்னோடு நான் பேசும் வார்த்தைகள் இன்றும்
     என் மனதோடு முடிந்துவிடுகின்றன ....
உன்னோடு நான் வாழும் வாழ்க்கை இன்றும்
     என் கனவாய் விடிந்துவிடுகின்றன ....

என் இதயம் உனக்காக துடித்துக் கொண்டிருந்தாலும்
      உன் உதயம் கண்டால் மட்டும் நின்றுவிடுவது  ஏனோ ?
என் இதழ்கள் உன்னையே பேசிக் கொண்டிருந்தாலும்
     உன் இமைகளைக்  காணும் நேரம் மௌனமாய் ஏனோ  ?
       
                 நான்" பெண் " என்பதாலா ??? இல்லை
                 நீ "ஆண்"  என்பதாலா  ??? இல்லை
                 நீ என்றும் "என்னவன்" என்பதாலா ???
பூக்களைக் கொடுத்து என் அன்பை கூறலாம்தான்
                               ஆனால் ..... நீ .....
                மறுத்து தூக்கி எறிந்தால் மடிவது
பூக்கள் மட்டுமல்ல என் இதயமும் அதனுள்ளே
                வாழும் உன் நினைவுகளும் தான் ....
அந்த மூன்றெழுத்து வார்த்தையின் அர்த்தம் புரியாமலே
                   உன்னை முழுதும் நேசிக்கிறேன்.......
அதை புரிந்து கொள்ள நொடிப்பொழுதேனும்
                    உன்னிடத்தில் உன் அன்பை யாசிக்கிறேன்...... 

Tuesday, 9 February 2016

தேடும் துளிகள் ...









காற்றிலே கலந்து மேகத்தில் மறைந்து
மலையிலே பட்டு பூமியில் விழுந்ததால்
பூத்தது புதிதாய் ஒரு மொட்டு ....

பனித்துளியாய் சிரிக்கும் நீர்த்துளியே !!
பகலவன் பார்த்ததும் மறைந்தாயே ??

வான் ஒளியில் நீலவண்ண ஆடை
வெள்ளி மின்னலாய் காட்டிலே நீரோடை ....

தேன்சொரியும் பூக்களால் புது சுகந்தம்
வான்பொழியும் மழையாலே வசந்தம்.....


செல்லும் இடமெல்லாம் செழிப்பாக்கினாய்
வாழும் உயிர்களின் பசி போக்கினாய்....

காணும் இடமெல்லாம் காட்சியாய் நீ !!
பேண உனை மறந்ததால் வறட்சியாய் பூமி .....

ஜீவநதிகளின் ஜீவனை பூமியில் தொலைத்து
செவ்வாயில் தேடுகிறோம்  புதிதாய் நீருற்று.....








மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...