உன்னோடு நான் பேசும் வார்த்தைகள் இன்றும்
என் மனதோடு முடிந்துவிடுகின்றன ....
உன்னோடு நான் வாழும் வாழ்க்கை இன்றும்
என் கனவாய் விடிந்துவிடுகின்றன ....
என் இதயம் உனக்காக துடித்துக் கொண்டிருந்தாலும்
உன் உதயம் கண்டால் மட்டும் நின்றுவிடுவது ஏனோ ?
என் இதழ்கள் உன்னையே பேசிக் கொண்டிருந்தாலும்
உன் இமைகளைக் காணும் நேரம் மௌனமாய் ஏனோ ?
நான்" பெண் " என்பதாலா ??? இல்லை
நீ "ஆண்" என்பதாலா ??? இல்லை
நீ என்றும் "என்னவன்" என்பதாலா ???
பூக்களைக் கொடுத்து என் அன்பை கூறலாம்தான்
ஆனால் ..... நீ .....
மறுத்து தூக்கி எறிந்தால் மடிவது
பூக்கள் மட்டுமல்ல என் இதயமும் அதனுள்ளே
வாழும் உன் நினைவுகளும் தான் ....
அந்த மூன்றெழுத்து வார்த்தையின் அர்த்தம் புரியாமலே
உன்னை முழுதும் நேசிக்கிறேன்.......
அதை புரிந்து கொள்ள நொடிப்பொழுதேனும்
உன்னிடத்தில் உன் அன்பை யாசிக்கிறேன்......
No comments:
Post a Comment