வானம் தொட்டுவிடும் தூரம்தான்.
ஆம் ....
வானம் தொட்டுவிடும் தூரம்தான் ....
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் அந்நியரின்
அடிமைப்பிடியில் வாழ்ந்த நாம் மீளவில்லையா ???
வறண்ட பூமியாய் இருந்ததை
வாழும் பூமியாய் மாற்றவில்லையா ??
கடுகைத் துளைத்துத்தான் வள்ளுவன்
இருவரியில் குறள் செய்யவில்லையா ??
அணுவைத் துளைத்துத்தான் அப்துல்கலாம்
ஆழ்கடலை அளக்க வில்லையா ???
இருளில் வாழ்ந்த மனிதன் வெளிச்சத்தைத்
தேடி ஒளி ஏற்றவில்லையா ????
போராட்டம் நிறைந்த இந்த பூமியில்
புகழ்உச்சியை எட்டியவரை காணும்போது
புரிகிறது தொட்டுவிடும் தூரம் தான் வானம் .......!!!
தேரோட்டமாய் நம் வாழ்வும் சிறந்திட
கனவு காண்போம் .... காணும்
கனவை நிஜமாக்கிட முயற்சிப்போம்.....!!!
முயற்சி என்பது மூலதனமானால்
முன்னேற்றம் பின்னே வந்து சேரும் ...
கஷ்டங்கள் என்பது காகிதமானால்
வெற்றிகள் அனைத்தும் காவியமாய் மாறும் ....
No comments:
Post a Comment