பூக்கள் எப்போதும் அழுததில்லை தான்
உதிரப்போவதை நினைத்து ....
பூச்செடிகள் என்றும் கலங்கியதில்லை பூக்கள்
மடிந்துப் போவதைக் குறித்து ....
மீண்டும் பூக்கும் மலர்களை வரவேற்க புன்னகைக்கிறது .
மனித மனமே ...!!! நீ மட்டும் ஏன் அழுகிறாய் ???
தொலைந்து போன இன்பங்களை தேடுவதை விட்டு
வளைந்து கொடுத்து வாழ்வினை வாழப் பழகிக்கொள் ....
துன்பங்களை தூரப்போடு....
புதியதொரு வாழ்வை வரவேற்க ...
வசந்தகாலம் பூக்களுக்கு மட்டுமல்ல ......
உனக்கும்தான்.....
No comments:
Post a Comment