
அன்பின் பெருங்கடலும் இவளே !!
ஆணின் தேடலும் இவளே !!!
களங்கமில்லா அன்பிலே அவளைத்
தாய் என்றான் !!!
கைப்பிடித்தபோதோ அவளைத்
தாரம் என்றான் !!!
தோள் தந்து தேற்றுமவளைத்
தோழி என்றான் !!!
தலைக்கோதி விளையாடிட
தமக்கை என்றான் !!!
தாலாட்டி சோறூட்டிட
தங்கமகள் என்றான் !!!
மொத்தத்தில் தோற்றத்தில்
தேவதை என்றான் !!!!!
விளங்கமுடியா புதிரென
விதியின் விளைவால்
விதைத்திட்டான் இறைவன் ....
விளக்கிட விழைந்து
பெயரிட்டான் பெண்ணென !!!!
No comments:
Post a Comment