வரைந்த ஓவியமும் நிறமற்று போகுமோ ???
வார்த்தை தூரிகை கொண்டு
வரைந்த இவன் கவிதை கண்டு !!!
விதைப்பன எல்லாம் இவன்
சிந்தனையின் சொற்களஞ்சியமோ - அதில்
விளைவன எல்லாம் தமிழ்
அன்னையின் பொற்பதக்கமென !!
கண்களில் விழுந்தன வெல்லாம்
கவிக்கு வித்தென மாறுமோ !!
தமிழுக்கு சொத்தென ஆனதோ !!!
இவனின்
குழல் ஊதிய கண்ணனும்
எரிதழல் ஏந்திய சக்தியும்
கார்கூந்தல் காரிகையும்
கரிய காக்கையும் குயிலும்
மரித்திடா வேட்கையும்
உரைத்திடாமல் போனால்
உறைந்திடுமோ தமிழ் மொழியும் !!!
பாரதியின் பா ரதியின்
அழகையும் மிஞ்சிடும்
பார் அதி வியந்தே
பருகிட கெஞ்சிடும் !!
No comments:
Post a Comment