Saturday, 30 January 2016

ரகசியங்களை வெளியிடுகிறேன் , மன்னிக்கவும் ......






ரகசியங்களை வெளியிடுகிறேன் , மன்னிக்கவும் ......
நான் அனாதையானேன்....
பெற்று  எடுத்தவள் என்னை ஏச
உற்றார் உறவினர் ஏளனம் செய்ய
ஆம் .....
நான் அனாதையானேன்.
அறிந்தவன் அறியாதவன் - என்னை
தெரிந்தவன் தெரியாதவன் - என் மனம்
புரிந்தவன் புரியாதவன் - எல்லோரின்
பார்வையிலும் நான் புதிராய் .....!!!
ஆம் ....
புரியாத புதிரானேன்.
பிறக்கும் போது நான் ஆணாய்
வளரும் போதோ பெண்ணானேன்
நான் அறியாமல்....
என்னுள்ளே நிகழ்ந்த பருவ மாற்றங்கள்
என்னுள்ளே மாறிய உருவ தோற்றங்கள்
ஆம் .....
நான் பெண்ணானேன் - ஆனால்
முழுமை பெறாதவளாய் ....
இது எதனால் நேர்ந்தது எனக்கு ????
என் விதியா ....???? இல்லை சாபமா ????
நிச்சயமாய் இல்லை .....
அறிவியலின் கணக்கு - மாறுபட்ட
ஹார்மோன்களினால் நேர்ந்த பிணக்கு ...
ஏனோ !!!!
பூலோக பூவுலகில் என்போன்ற பூவையர்க்கு
புதியதோர் வரவேற்பு ....
நாங்கள் மட்டும் செல்லாக்காசாய் ....
நாங்கள் மட்டும் ஏளனப்பொருளாய் ...
நாங்கள் மட்டும் அவமானசின்னமாய் ....
மனிதமனமே ! ஏன் இந்த வித்தியாசம் ?
என்று தீரும் எங்கள் மௌனப் போராட்டம் ......
வேங்கையாய் பிறந்து....
மங்கையாய் மலர்ந்த....என்போன்றோருக்கு
மண்ணில் அளித்த பட்டம்
             "திருநங்கை "
இதோ உங்களிடம் சிறியதோர் விண்ணப்பம் :
"ஏற்றுக்கொள்ளுங்கள் "   என்பதல்ல
"ஏளனம் செய்யாதீர் " என்பதே .....
                                                                         
                                                                                      இப்படிக்கு ,
                                                                    உங்களைப்  போல் வாழ விரும்பும்
                                                                                         இதயம்


No comments:

Post a Comment

மண்ணில் விழுந்த விதை

கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட  விண்ணும் மண்ணும் சேர்த்து  பூமிக்குள் சொர்க்கம் படைத்தார்  இயற்கை அன்னை ....!!! பச்சை பு...