விடியலுக்கென காத்திருக்கும் மக்கள்
மலருமென்ற நம்பிக்கையில் பூக்கள்
வேனில்கால உதிரா இலைகள்
வரவேற்க கோர்த்திடும் கைகள்
வர்ணம் பூசப்பட்ட சுவர்கள்
வகை வகையாய் சுவரொட்டிகள்
திடீரென முளைத்த மேடைகள்
வான்முட்டும் மேடைபேச்சுக்கள்
கட்டப்பட்ட கொடிகள்
வெடிக்கும் வெடிகள் ...
ஊர் திருவிழாவோ ??
இதுவும் விழா தான் ...
ஆனால்...
மகேசன் ஆட்சிக்கு அல்ல
மகேசன் ஆட்சிக்கு அல்ல
மக்கள் ஆட்சிக்கு !!
செய்ததை சொல்லும் ஒரு கூட்டம்
சொல்வதை செய்வோம் என்று இன்னொன்று
இலவசம் கொடுத்து தன்வசம் இணைக்க
தள்ளுபடி செய்து முதல்படி அடைய
வாய்ப்புகள் உண்டென யாசிக்கும் கோப்புகள்
வாக்குறுதிகள் பக்கம் பக்கமாய் ....
வசனங்கள் எழுதப்பட்டு இங்கே
வாசிக்கப்பட அரங்கேறும் பிரச்சாரங்கள் !!
மூவாறு வயது கடந்து
முதல் உரிமை பெற்ற
களிப்பில் ஒரு கூட்டம் - தான்
முதுமை அடைந்த காலத்தும்
முதல்வன் கடமை செய்யாத
வெறுப்பில் ஓர் கூட்டம் !!
ஆயினும் ....
எங்கோர் மூலையில் இருந்தாலும்
எனக்கோர் கடமை உண்டென்று
தன்னூர் செல்லும் குடிமகன் !!
எழுதப்படா விதியென
ஊழல் உள்ளவரை
உழப்படா வயலாய்
தரிசாகும் அரசியல் !!
இன்றொரு நாள் மட்டும்
கறை படியட்டும்
இனிவரும் ஒவ்வொருநாளும்
கறை படியாதிருக்க ...!!
கறை படிந்தது
ReplyDeleteமொத்த கரையும் நீங்கும்
என்ற ஒரு நம்பிக்கையில்...