காலை ஆறு மணி ....!!!
நிலவு எங்கோ களவு போயிருக்க
உளவு பார்க்க வந்ததோ....செங்கதிரை
வானெங்கும் பரப்பி சூரியன் ...!!
கரைந்து போகும் காகமும்
களைத்து போனது தன்பணி செய்து
கீச்சிடும் குருவிகளின் சத்தத்தில்
கலைந்து போனது என் உறக்கமும் ...!!
மெலிதாய் ஒரு வெளிச்சக் கோடு
முன் சாளரம் வழியே பளிச்சிட ...
கடிகாரம் ஒலியெழுப்பி விடியலை சொல்ல
என் கனவும் தொலைந்து போனது
இதோ நிகழ்காலத்தில் நான் ....!!
காலை நேரப் பனித்துளி ரசித்தபடி
கோப்பைத் தேநீரை ருசித்தபடி
அலசினேன்.... அன்றைய
விடியலை செய்தித்தாளில்
அலைப்பேசியின் குறுஞ்செய்திகளுக்கு
விடை அளித்தபடி....
இட்லியுடன் புதினா சட்னியும் இதமாய்
பிட்டு உண்ட நிறைவோடு இனிதாய்
சிற்றுண்டி முடிந்தது காலை வேளையில் ....!!!
புதிதாய் மலர்ந்த பூக்களின் மணமாய்
புன்னகையோடு என் மனமும் துளிராக
புது மலர்ச்சியோடு நடந்தேன் சாலையில் ....!!!
புங்கைமரம் என்னை வரவேற்க
சொறிந்ததோ பூ மழை
மஞ்சளாடையில் தார் சாலை....
இன்னமும் தேடிக்கொண்டுதான்
இருக்கிறான் போல பகலவன்
ஏனோ ?? நிலவு கிடைக்காததாலோ...!!
உஷ்ணமாய் தகிக்கிறான் ...!!
பசியால் உடலும் சோர்வுற
புசிக்க அமர்ந்தேன் உணவை
ருசிக்க ஏனோ நா மறக்கவில்லை
அமிழ்தாய் இனித்தது சமையல்
அம்மாவின் கைப் பக்குவத்தில் ...!!
மெல்ல விலகும் கதிரவன்
மறைந்து கொண்டான் மலைமுகட்டில்
மறைத்து கொண்டானோ .. ??? தன் மனதையும் ...!!
மீண்டும் அதே தார்சாலை ....!!!
தென்றல் காற்றில் மெய்சிலிர்க்க
உணர்ந்தேன்.... பூக்களின் வாசம் !!
இதயம் சென்று திருடும்
இயற்கையின் வனப்பு ...!!
வீதியில் நான் சேரும் முன்னே
உணர்ந்தாள் வருகையை என் அன்னை
வாயிலில் நீர் தெளித்து
வரவேற்றாள் செவ்வானத்தை...!!
வெட்கம் கொண்டதோ வானம் !!
செஞ்சிவப்பு நிறம் மட்டும் ஏனோ ??
ஆகாயத்தில் தினமும் நிகழ்வது தானோ ??
வானில் ஓர் ஊடல்; இது நிலவுக்காய் தேடல் ...
வெள்ளைப் பூவாய் நிலவே !!!
வானில் நீயும் பூத்திருக்க ...
கொள்ளை கொள்ளும் அழகிலே!!
மறைந்து போயிருக்க....
தன்னை தொலைத்து பகலவனும்
இரவு உணவை முடித்திருக்க....
நிலாச்சோறு உண்ட திருப்தியில்...நானும் ..
மீண்டும் வந்தது குளிர் தென்றல்
கண்கள் சொருக ....வானிருளில்
உலா போக வந்தது வளர்பிறை
நிலவு.... களவு போனேன்
நானும் அதன் ஒளியிலே
உறக்கம் கொண்டன இமைகளும்
விடியலுக்கான கனவுகளோடு ....
nice....
ReplyDeleteSuperb!!!!..
ReplyDeleteArumaiyana kavithai...
ReplyDeletesirappu :)
ReplyDeleteSuperb da goki...nice one..😉✌
ReplyDeleteSuperb da goki...nice one..😉✌
ReplyDelete