வலிகள் அவனுள்ளே இருந்த போதும்
விழிகள் பேசியதில்லை
வழித்துணையாய் என்றும்
துணை வரும் - இவன் மொழி
புன்னகைக்க மட்டுமே கற்றுக் கொண்டவள்
என் முன்னே
கண்ணீர்துளிகளை காற்றுக்கு மட்டும்
தத்து கொடுத்தவள்- இவள்
தோற்றங்கள் மாறினும்
ஏற்றங்கள் காண்பினும்
வருடங்கள் ஓடியும்
வயது கூடியும்
வாழ்வில் என்றும்
இவனுக்கு துணையாய் இவள் !!
இவளுக்கு இணையாய் இவன் !!
பூமியில் நானும் பூக்க காரணம் - இவர்கள்
பெற்றெடுத்தவள் - இவள்
கற்று கொடுத்தவன் - இவன்
விழிகள் பேசியதில்லை
வழித்துணையாய் என்றும்
துணை வரும் - இவன் மொழி
புன்னகைக்க மட்டுமே கற்றுக் கொண்டவள்
என் முன்னே
கண்ணீர்துளிகளை காற்றுக்கு மட்டும்
தத்து கொடுத்தவள்- இவள்
தோற்றங்கள் மாறினும்
ஏற்றங்கள் காண்பினும்
வருடங்கள் ஓடியும்
வயது கூடியும்
வாழ்வில் என்றும்
இவனுக்கு துணையாய் இவள் !!
இவளுக்கு இணையாய் இவன் !!
பூமியில் நானும் பூக்க காரணம் - இவர்கள்
பெற்றெடுத்தவள் - இவள்
கற்று கொடுத்தவன் - இவன்
No comments:
Post a Comment