வான் சிந்திய மழைத்துளியில்
நனைந்த பச்சைக்கொடிகள்
இச்சையோடு பெற்றெடுத்தனவோ
தேன் சிந்தும் மழலையை !!
தேன் சிந்தும் மலரிதழில்
பசியாறி பல்லுயிர் பெருக்க
தான் தேடி வந்தனவோ
ருசியறிந்த வண்ண சிறகுகள் !!!
சிறகுகளில் சிக்கிய மகரந்தங்கள்
காற்றோடு கதை பேசி
சேறோடு விதையாகி வளர்ந்தனவோ
நிழல் தரும் விருட்ஷமென !!!
விருட்சத்தின் நிழலில் இளைப்பாற
விருந்தானது வீசிடும் காற்று ...
மருந்தும் தேவையோ மலைத்திடும்
இயற்கையோடு வாழ்ந்திடும் வாழ்வில் !!
நனைந்த பச்சைக்கொடிகள்
இச்சையோடு பெற்றெடுத்தனவோ
தேன் சிந்தும் மழலையை !!
தேன் சிந்தும் மலரிதழில்
பசியாறி பல்லுயிர் பெருக்க
தான் தேடி வந்தனவோ
ருசியறிந்த வண்ண சிறகுகள் !!!
சிறகுகளில் சிக்கிய மகரந்தங்கள்
காற்றோடு கதை பேசி
சேறோடு விதையாகி வளர்ந்தனவோ
நிழல் தரும் விருட்ஷமென !!!
விருட்சத்தின் நிழலில் இளைப்பாற
விருந்தானது வீசிடும் காற்று ...
மருந்தும் தேவையோ மலைத்திடும்
இயற்கையோடு வாழ்ந்திடும் வாழ்வில் !!
No comments:
Post a Comment