உதிக்கும் சூரியனோடு உரையாடி கொஞ்சம்
மதிக்கும் மனிதத்தின் மனதோடு கொஞ்சம்
பறக்கும் சிறகுகளின் பரவசத்தில் கொஞ்சம்
சிரிக்கும் பூக்களின் இதழோடு கொஞ்சம்
ஆர்ப்பரிக்கும் கடலின் அலையோடு கொஞ்சம்
கண்பறிக்கும் சிலையின் கலையோடு கொஞ்சம்
வளைந்த வானவில்லின் வண்ணத்தில் கொஞ்சம்
விளைந்த பூமியின் பசுமையில் கொஞ்சம்
சீரும் மனதின் சீற்றங்களில் கொஞ்சம்
கோரும் புது மாற்றங்களில் கொஞ்சம்
கதைத்த சொல்லின் கதைகளில் கொஞ்சம்
விதைத்த வினையின் விதியாய் கொஞ்சம்
கட்டிய மாளிகையின் மமதையில் கொஞ்சம்
பூட்டிய சிறையின் வெறுமையில் கொஞ்சம்
கற்ற வேதங்களின் அறிவாய் கொஞ்சம்
மற்ற வேதனைகளின் விலையாய் கொஞ்சம்
விழி எய்திடும் அம்பில் கொஞ்சம்
மொழி செய்திடும் வம்பில் கொஞ்சம்
மறந்திட கொஞ்சம் மாய்த்திட கொஞ்சம்
துறந்திட கொஞ்சம் துதித்திட கொஞ்சம்
சொற்படி கொஞ்சம் சுயமாய் கொஞ்சமென
கொஞ்சம் பார்த்து கொஞ்சம் கேட்டு
கொஞ்சம் உணர்ந்து கொஞ்சம் வியந்து
கொஞ்சும் தமிழில் நான் அனுபவித்ததை
வஞ்சமின்றி வயலில் விதைத்திட்ட
விதை - வார்த்தை
நெஞ்சம் நிறைந்திட விளைந்திட்ட
விளைச்சல் - கவிதை !!

No comments:
Post a Comment